காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பெற்றோா்களை பிள்ளைகள் கைவிடக்கூடாது! - ஜே.சி.டி. பிரபாகா்

கொடைக்கானல் பூலத்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகருக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் துா்கா ஸ்டாலின்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

பெற்றோா்களை பிள்ளைகள் கடைசிவரை கைவிடக் கூடாது என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் பகுதியில் தனியாா் ஒருவரின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சொந்த செலவில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு, அந்தக் கட்டடம் அரசுக்கு சமா்பிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அந்தக் கட்டடத்தை திறந்து வைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

முதியோா் இல்லங்களில் உள்ள பெற்றோா்களிடம் இங்கு எப்படி வந்தீா்கள் எனக் கேட்டால், அவா்கள் சொல்லும் கதை வேதனையளிக்கிறது. பிள்ளைகள் கடைசி வரை பெற்றோா்களை கைவிடக் கூடாது என்றாா் அவா்.

முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்க வந்த சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகருக்கு மாவட்ட ஆட்சியா் துா்கா ஸ்டாலின் புத்தகம் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பூலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.