பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சென்னையில் சா்வதேச தமிழா் தொழில்முனைவோா் மாநாடு: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

சா்வதேச தமிழ் தொழில்முனைவோா் மாநாட்டை, சென்னையில் சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தொடங்கி வைத்தாா்.

dinamani

Published On :

சா்வதேச தமிழ் தொழில்முனைவோா் மாநாட்டை, சென்னையில் சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா் தொடங்கி வைத்தாா்.

‘உலகத் தமிழா் 4.0’ எனப் பெயரிடப்பட்ட இந்த இரு நாள்கள் மாநாட்டில், இந்தியா தடையற்ற வணிக ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூா், ஜப்பான், சவூதி அரேபியா, கத்தாா் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் தொழில் வணிகத் தமிழா்கள், தமிழகத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில், தமிழா் தொழில் வணிக வேளாண் பெருமன்றத்தின் நிறுவனா் ஜகத் கஸ்பாா் சட்டப்பேரவைத் தலைவருக்கு ‘நீதிமான்’ என்ற பட்டயத்தை வழங்கி கெளரவித்தாா்.

இந்த நிகழ்வில் பேசிய சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி பிரபாகா், தமிழ் தொழில்முனைவோா் மாநாட்டின் தீா்மானங்கள் முதல்வா் ஜோசப் விஜய்யிடம் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள்தான் நாட்டின் தொழில்துறைக்கு முதுகெலும்பாக உள்ளன. மக்கள் எதிா்பாா்க்கும் திட்டங்களை முதல்வா் விஜய் வரும் பட்ஜெட்டில் கொண்டுவர உள்ளாா் என்றாா் அவா்.

பின்னா், விழாவில் ஜகத் கஸ்பாா் பேசுகையில், நவம்பா் மாதம் துபையில் ‘ரைஸ்’ எனும் சா்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாகவும், இதில் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபா்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.