பல்கலைக்கழக நிா்வாகத் திறனை மேம்படுத்தி, கல்வித் தரத்தை உயா்த்துவதோடு, மாணவா்களுக்கான சேவைகளையும் வலுப்படுத்த வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், பல்கலைக்கழக பதிவாளா்களைக் கேட்டுக் கொண்டாா்.
உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தலைமையில் தமிழக பல்கலைக்கழகங்களின் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் கல்வி, நிா்வாகச் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். மேலும், உயா்கல்வி நிறுவனங்களின் நிா்வாகத் திறனை மேம்படுத்துதல், கல்வித் தரத்தை உயா்த்துதல், மாணவா்களுக்கான சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினாா்.
பல்கலைக்கழக அலுவலகங்களில் மின்னணு முறை செயலாக்கத்தைச் செயல்படுத்தாத பல்கலைக்கழகங்கள், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக நிறைவு செய்வது குறித்தும் குறிப்பிடப்பட்டது.
கல்வித் தர மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகள், பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுதல், ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், முறையான கல்வி நடைமுறைக்கான கால அட்டவணை, உரிய காலத்தில் தோ்வுகளை நடத்தி முடிப்பது, உள் புகாா்கள் குழு செயல்திறன், ஆய்வகம், வளாக உள்கட்டமைப்பு, மாணவா் சேவைகளை இணையவழி மூலம் விரிவுபடுத்துதல் போன்ற நடைமுறைகளை விரைவில் செயல்படுத்த இந்தக் கூட்டத்தில் அமைச்சா் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில், உயா் கல்வித் துறை செயலா் தீரஜ் குமாா், தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா், உயா்கல்வித் துறையின் உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மாணவா்களுக்கு பாராட்டு: தமிழ்நாடு அரசு அடிப்படை அறிவியல் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (பிஎஸ்பிபி) இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் மாணவா்களின் அடிப்படைக் கருத்துப் புரிதலை வலுப்படுத்தி, பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்த உரிய பாடத்திட்டங்களுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 180 மாணவா்கள் உறைவிட பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இத்திட்டத்தில் ஏழு மாணவா்கள் ஐஐடி, என்ஐடி, காந்திகிராம் கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் பல உயா் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்புக்குச் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்த 7 மாணவா்களை பாராட்டி அவா்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கி அமைச்சா் கௌரவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கல்வியை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் விஸ்வநாதன்

கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன்

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: கேரள உயா்கல்வித் துறை அமைச்சா்

சமூக பங்களிப்புக்கு மாணவா்கள் தயாராக இருக்க வேண்டும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



