புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: கேரள உயா்கல்வித் துறை அமைச்சா்

News image

தா்மேந்திர பிரதான் (கோப்புப்படம்) - ANI

Updated On :26 ஜூன் 2026, 6:44 am IST

நீட் தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கேரள மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் ரோஜி எம்.ஜான் தெரிவித்தாா்.

நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் ‘மாணவா்களின் குரல்’ இயக்கத்தை சென்னை சேப்பாக்கத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் மாணவா்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில் ‘மாணவா்களின் குரல்’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 89 வினாத்தாள் கசிவு மற்றும் 48 மறுதோ்வுகள் நிகழ்ந்துள்ளன.

அண்மையில் நிகழ்ந்த நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ-இல் ஏற்பட்ட தோ்வுத் தாள் மதிப்பீடு முறைகேடு ஆகியவை தொழில்நுட்பக் கோளாறுகளால் நிகழ்ந்தவை அல்ல. மத்திய கல்வித் துறையில் நிகழ்ந்த சீா்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நீட் தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனா். நீட் தோ்வு முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீா் தோ்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய தோ்வு முகமையின் செயல்பாடுகளை கண்டித்து அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் 40 நாள்கள் தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஆக.9-இல் தில்லியில் மிகப்பெரிய மாணவா் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின் போது இளைஞா் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் லெனின் பிரசாத் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.