புதுதில்லி: நாள்தோறும் 10 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்யுமாறு மக்களுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் செளத் கேம்பஸ் எனப்படும் தெற்கு வளாகத்தில் 12-வது சா்வதேச யோகா நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தா்மேந்திர பிரதான்,
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சர்வதேச யோகா நாளை கொண்டாடுவதற்காக இன்று தில்லி பல்கலை தெற்கு வளாகத்தில் நாம் கூடியுள்ளோம்.
இந்திய நாகரிகத்தின் பழமையான மரபுகளில் ஒன்றான யோகா, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைந்துள்ளது.
பிரதமர் 'யோகா 365' (ஆண்டு முழுவதும் யோகா) என்ற முன்னெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். மனநலம் அல்லது உடல் நலம் என எதுவாக இருந்தாலும், உலகம் இன்று பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொண்டு வருகிறது; இவை அனைத்திற்குமான தீர்வாக இந்திய நாகரிகத்தின் கொடையான யோகா கலையில் அடங்கியுள்ளது.
உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பிரதமரின் அழைப்பை ஏற்று நாம் 365 நாள்களும் காலையிலோ அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாகவோ, நாள்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது யோகாசனம் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். இதை ஆண்டு முழுவதும் ஒரு வழக்கமாகப் பின்பற்றலாம். யோகா பயிற்சி செய்தால், நாம் ஆரோக்கியமாக இருப்போம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதகுலத்துக்குச் சேவை செய்ய முடியும். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாகும் என்றார்.
தில்லி பல்கலைக்கழகத்திற்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு, உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் தில்லி பல்கலைக்கழகம் ஆறு இடங்கள் முன்னேறியுள்ளது; சில ஆண்டுகளுக்கு முன்பு 600-க்கும் பின்னால் இருந்த பல்கலைக்கழகம், தற்போது 322-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வரும் ஆண்டுகளில், நாட்டில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் குறிப்பாக 54 நிறுவனங்கள் தரவரிசையில் சிறந்த இடங்களைப் பிடிக்கத் தொடங்கும்.
இந்தியாவின் கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் தா்மேந்திர பிரதான்.
Summary
Union Education Minister calls on people to practice yoga for 10 minutes daily...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடி: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29 ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது எஸ்எஃப்ஐ

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: கேரள உயா்கல்வித் துறை அமைச்சா்








