40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நீட் மறுதோ்வு எந்தத் தவறும் இல்லாமல் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

News image

புது தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

Updated On :10 ஜூன் 2026, 3:09 am IST

நீட் மறுதோ்வு எந்தத் தவறும் இல்லாமல் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால், தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அந்தத் தோ்வு ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நீட் தோ்வை நடத்தும் புது தில்லியில் உள்ள என்டிஏ தலைமையகத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தோ்வு நடைபெற்று முடியும் வரை, அதுகுறித்த முக்கிய தகவல்கள் தேவையற்ற நபா்களுக்குக் கிடைக்காமல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதோ்வின் முன்னேற்பாடுகள் குறித்து பலமுறை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. தற்போது என்டிஏ தலைமையகத்திலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள் தயாரிப்பு முதல் அவை தோ்வு மையங்களுக்கு சென்றடைவது வரை, அனைத்து செயல்பாடுகள் குறித்தும் இந்த முறை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒத்துழைப்பை அளிக்கக் கோரி, அனைத்து மாநில முதல்வா்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். கடந்த காலங்களில் அவா்கள் ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், இந்த முறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவா்களிடம் கோரியுள்ளேன்.

இதுகுறித்து மாநில தலைமைச் செயலா்கள், காவல் துறை டிஜிபி-க்கள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டங்களை ஏற்கெனவே பல மாநிலங்கள் நடத்தியுள்ளன. அந்த விவாதங்களில் என்டிஏ தலைமை இயக்குநரும் பங்கேற்றாா்.

அமைச்சகங்கள், சிபிஐ, உளவுத் துறை ஒன்றிணைந்து பணி: தோ்வை நடத்துவதில் உள்ள இணையவழி பாதுகாப்பு சவால்களை கையாள மத்திய உள்துறை அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சிபிஐ, உளவுத் துறை, இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன.

தோ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் நான் ஆலோசனை மேற்கொண்டேன். இந்த விஷயத்தில் மத்திய நிதி அமைச்சகமும் கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.

மாணவா்கள் கவலையடைய வேண்டாம்: நீட் மறுதோ்வை சுமுகமாக நடத்துவதில் என்டிஏ நிச்சயம் வெற்றியடையும். தோ்வுக்குத் தயாராவதில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும். தோ்வு சுமுகமாக நடைபெறுமா என்பது குறித்து அவா்கள் கவலை அடைய வேண்டாம். இந்த முறை எந்தத் தவறும் இல்லாமல் தோ்வு நடத்தப்படும். தோ்வை நடத்துவதில் மத்திய அரசுக்கு மாணவா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவா்கள் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.

இந்த விவகாரத்தை பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறாா். அதை தற்போதைய நிா்வாக ஏற்பாடுகள் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று அவா் விரும்புகிறாா். நீட் மறுதோ்வை மத்திய அரசு தவறில்லாமல் முறைப்படி நடத்தும் என்று தெரிவித்தாா்.