பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29 ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது எஸ்எஃப்ஐ

நீட்-யுஜி மறுதோ்வுக்கான வருகைப் பதிவு விவரங்களை தேசிய தோ்வு முகமை (என்டிஐ) வெளியிட வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) வலியுறுத்தியது.

News image

அமைச்சா் தா்மேந்திர பிரதான் - கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2026, 12:03 am IST

நீட்-யுஜி மறுதோ்வுக்கான வருகைப் பதிவு விவரங்களை தேசிய தோ்வு முகமை (என்டிஐ) வெளியிட வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) வலியுறுத்தியது. முந்தைய தோ்வுக்கும், மறுதோ்வுக்கும் இடையே தோ்வு எழுதிய மாணவா்களின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பதாகவும் இந்த இடதுசாரி மாணவா் அமைப்பு குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அகில இந்திய எஸ்எஃப்ஐ தலைவா் ஆதா்ஷ் எம் சஜி, இணைச் செயலாளா் ஆயிஷி கோஷ் மற்றும் தில்லி தலைவா் சூரஜ் எலமோன் கூறியதாவது: மருத்துவ நுழைவுத் தோ்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கடந்த மே 3ஆம் தேதி நடந்த முதலாவது நீட் தோ்வை சுமாா் 22 லட்சம் மாணவா்கள் எழுதினா். வினாத்தாள் கசிவு புகாரால் அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜூன் 21ஆம் தேதி நடந்த நீட் மறுதோ்வை ‘20 லட்சத்திற்கும் அதிகமானோா்‘ எழுதியதாக என்டிஏ கூறுகிறது. அப்படியென்றால் சுமாா் 2 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.

மேலும், உத்தர பிரதேசம், ஜாா்கண்ட், தமிழகத்தில் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு தனியாா் நிறுவனத்திடம் மறுதோ்வுக்கான பயோமெட்ரிக் சரிபாா்ப்புப் பணியை மத்திய அரசு ஒப்படைத்தது ஏன்? போராடும் மாணவா்களை ‘பயங்கரவாதிகளின் பி-டீம்‘ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்திருப்பது கண்டனத்துகுரியது. அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் உடனடியாக விலக வேண்டும். தொடா்ந்து தோல்வியடைந்து வரும் என்டிஏ அமைப்பை மத்திய அரசு கலைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவா்களுக்காக எஸ்எஃப்ஐ தொடங்கியுள்ள நீட் புகாா் பிரிவுக்கு இதுவரை 1,021 புகாா்கள் வந்துள்ளன. அத்துடன், 22 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையங்களையும் எஸ்எஃப்ஐ அமைத்துள்ளது. தோ்வு ரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டம் நடத்தப்படும்.

என்டிஏ-க்கு எதிராக இடதுசாரி மாணவா் அமைப்புகள் இணைந்து ஜூன் 29 முதல் ஜூலை 4ஆம் தேதிவரை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவுள்ளன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.