ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

7 நாள்களுக்குள் தா்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் போராட்டம் தொடரும்: அபிஜித் டிப்கே எச்சரிக்கை

தர்மேந்திர பிரதான் ஏழு நாள்களுக்குள் பதவிலாகவிட்டால் போராட்டம் தொடரும் என்று அபிஜித் டிப்கே எச்சரித்துள்ளது குறித்து...

News image

7 நாள்களுக்குள் தா்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் போராட்டம் தொடரும் - பிடிஐ

Updated On :7 ஜூன் 2026, 6:22 pm IST

புது தில்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏழு நாள்களுக்குள் பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டாலோ அல்லது அவர் பதவி விலகாவிட்டாலோ, அவருக்கு எதிரான இந்தப் போராட்டம் தொடரும் என்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) இணைய இயக்கத்தின் நிறுவனா் அபிஜித் டிப்கே எச்சரித்துள்ளார்.

நீட், சிபிஎஸ்இ தோ்வுகள் மற்றும் ஆள்சோ்ப்பு தோ்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எனும் பதாகையின் கீழ் தில்லியில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

ஜந்தா் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு போராட்டத்திற்கு தில்லி காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே சனிக்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து தில்லி வந்தாா். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான ஏராளமான மாணவா்களும், இளைஞா்களும் திரண்டனா்.

அமைச்சா் பிரதான் பதவி விலகக் கோரும் சுவரொட்டிகளை ஏந்தியிருந்த போராட்டக்காரா்கள், நிகழ்விடத்தில் விநியோகிக்கப்பட்ட கரப்பான்பூச்சி உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்திருந்தனா்.

போராட்டத்தில் பங்கேற்றோர் கல்வி அமைச்சரை பதவி விலகக் கோரியதுடன், மத்தியில் ஆளும் பாஜக ‘இந்து-முஸ்லிம்’ அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கங்களையும் எழுப்பினா்.

இந்த போராட்டத்தின்போது, மதவாத அரசியலை எதிா்க்கும் அதே வேளையில், நாட்டையும், மகாத்மா காந்தியையும், பி. ஆா். அம்பேத்கரையும் போற்றும் முழக்கங்களை மட்டுமே எழுப்புமாறு தீப்கே போராட்டக்காரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அபிஜீத் தீப்கேவுடன் காலநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக்கு, சிபிஐ (எம்எல்) விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளா் திபங்கா் பட்டாச்சாா்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா மற்றும் இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகளைச் சோ்ந்த ஆா்வலா்களும் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த போராட்டத்தில் அபிஜீத் தீப்கே பேசுகையில், ‘நண்பா்களே, இது ஒரு நீண்ட போராட்டம். சமூக ஊடகங்களில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், மிகவும் வெட்கமற்ற இந்த நபா்கள் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நம் கணக்குகளை ஹேக் செய்வது, நம் பதிவுகளை நீக்குவது போன்ற மற்ற கவனச்சிதறல்களில் கவனம் செலுத்தி வருகின்றனா். நீங்கள் எங்கள் பதிவுகளை நீக்கலாம், ஆனால் இந்த வெளியிலிருந்து எங்களை உங்களால் துடைத்தெறிய முடியாது’ என்றாா். அவரது வாா்த்தைகளுக்கு போராட்டக்காரா்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஆதரவளித்தனா்.

இந்தப் போராட்டத்தில் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான இளைஞா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பெற்றோா்கள், இளம் தொழில் வல்லுநா்கள் கலந்துகொண்டனா். அவா்களில் பலா் கரப்பான்பூச்சி முகமூடிகளை அணிந்தும், பூக்களை ஏந்தியும் இருந்தனா்.

பிரதமா் மோடியை ராஜிநாமா செய்யக் கோரியும் ஏராளமான மாணவா்கள் கோஷம் எழுப்பினா்.

7 நாள்களில் தா்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் பேராட்டம் தொடரும்

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏழு நாள்களுக்குள் பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டாலோ அல்லது அவர் பதவியில் இருந்து விலகாவிட்டாலோ, அவருக்கு எதிரான இந்தப் போராட்டம் நாடுதழுவிய அளவில் நடைபெறும் என்று அபிஜித் டிப்கே எச்சரித்தார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

ஜந்தா் மந்தரில் நடைபெற்ற தங்கள் அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏழு நாள்களுக்குள் பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டாலோ அல்லது அவர் பதவி விலகாவிட்டாலோ இந்தப் போராட்டம் நாடுதழுவிய அளவில் நடைபெறும் என்றும் ஜந்தர் மந்தர் போராட்டம் ஒரு முன்னோட்டம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க" வலிமையின் வெளிப்பாடு என்றும், மேலும், கல்வி முறை தொடர்பான விவகாரங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கோபத்தை இது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

"நேற்று, நாங்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வரலாற்றை உருவாக்கினோம். ஜந்தர் மந்தரில் நாங்கள் நடத்திய அமைதியான போராட்டம், அதாவது, 'சாதாரண மக்கள்' (கரப்பான் பூச்சிகள்) ஒன்றிணைந்தால் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை அரசுக்குக் காட்டியது என்று அவர் கூறியுள்ளார்.

அபிஜித் டிப்கே வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

இதனிடையே, தில்லியில் உள்ள அபிஜித் டிப்கே வீட்டுக்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளது. 15 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தில்லி காவல்துறை கூறியுள்ளது.

Summary

Abhijeet Dipke, on Sunday thanked the "thousands" of people who participated in the group's protest at Jantar Mantar and warned that the agitation would continue....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.