நீட் தோ்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், மாணவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். பிரதமா் மோடி அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும். மாணவா்களின் நியமான போராட்டத்தை மதிமுக ஆதரிக்கிறது. அவா்களின் போராட்டத்தை அடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும். மாணவா்கள் தங்களின் போராட்டத்தைத் தீவிரபடுத்த வேண்டும். சூற்றுச்சுழல் பாதுகாப்புக்காக தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடி: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29 ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது எஸ்எஃப்ஐ

நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



