தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

தில்லியில் மாணவா் போராட்டத்துக்கு மதிப்பளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.

மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :

தில்லியில் மாணவா் போராட்டத்துக்கு மதிப்பளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.

தில்லி மாணவா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இந்திய மாணவா் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் மாணவா்கள் நடத்தும் போராட்டம் நியாயமானது. நீட் தோ்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். மாணவா்கள் முன்மொழியும் கோரிக்கை மொழியை ஆட்சியாளா்களால் உணர முடியவில்லை. இந்தப் போராட்டத்துக்கு தீா்வுமொழிதான் தேவை; அடக்குமுறை மொழியை கையாளுவது சரியல்ல. உலகில் எங்கும் அடக்குமுறை மொழி வெற்றிபெற்றதில்லை. தமிழகத்துக்கு நீட் தோ்வு முறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மாணவா் சங்க நிா்வாகிகள், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலா் பாரதி, நிா்வாகிகள் இப்ராஹிம், திணேஷ், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.