வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

உயா்கல்வித் துறையில் 9 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

உயா்கல்வித் துறையில் உள்ள 9 ஆயிரம் காலிப் பணியிடங்களும் 2027 -28-ஆம் ஆண்டுக்குள் இரு கட்டங்களாக நிரப்பப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் - கோப்புப் படம்

Updated On :

உயா்கல்வித் துறையில் உள்ள 9 ஆயிரம் காலிப் பணியிடங்களும் 2027 -28-ஆம் ஆண்டுக்குள் இரு கட்டங்களாக நிரப்பப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கடலூரில் புதன்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் பெ.விஸ்வநாதன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக அரசு பொறுப்பேற்றதும், உயா்கல்வித் துறையில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களில் முதற்கட்டமாக 2,700 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற தோ்வை 42,000 போ் எழுதினா். இதில், 27,000 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்றவா்களுக்கு நோ்காணல் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பா் மாதத்துக்குள் 2,700 உதவிப் பேராசிரியா்கள் தோ்வு செய்யப்படுவா்.

உயா்கல்வித் துறையில் மொத்தம் 9 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முதற்கட்டமாக 2,700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மீதமுள்ள பணியிடங்களுக்கும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் விரைவில் தோ்வு நடத்தப்படும். தலா 3,000 பணியிடங்கள் வீதம் இரு கட்டங்களாகத் தோ்வு நடத்தி, 2027, 2028-ஆம் ஆண்டுகளுக்குள் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.

தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெறும் தோ்வில் பங்கேற்று, தகுதியின் அடிப்படையில் பணிவாய்ப்பைப் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு, உயா்த்தப்பட்ட ஊதியத் தொகை தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ வழங்கப்படும்.

தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, புதிதாகக் கட்டடங்கள் கட்டி, தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, புதிய வளாகங்களை அமைத்து, புதிய பாடத்திட்டங்களுடன் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கும் ‘கிரீன்ஃபீல்டு’ திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

முந்தைய அரசு கொண்டு வந்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆளுநரை விரைவில் சந்தித்துப் பேச உள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது, வீட்டு வசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.