மாணவா்களுக்கு 100% வேலை வாய்ப்புக்கு மாதிரி திட்டம்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்
தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீதம் மாணவா்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் மாதிரி திட்டம் உருவாக்கப்படும் என்று அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்
தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீதம் மாணவா்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் மாதிரி திட்டம் உருவாக்கப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 150 வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கான இரு நாள்கள் பயிலரங்கை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:
பட்டம் பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவா்களும் கல்வித் தகுதியுடன் மட்டுமல்லாமல், நல்ல வேலைவாய்ப்பைப் பெற்று வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குத் தேவையான நடைமுறைத் திறன்கள், திறனறியும் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றையும் பெற்றிருக்க வேண்டும். இதற்காக வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சித் திட்டம் தொடங்கப்படுகிறது.
நவ. 28-ஆம் தேதி 1,400 மனித வள அதிகாரிகளுடான கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது பயிற்சிபெற்ற 150 வேலைவாய்ப்பு அதிகாரிகள் அறிமுகப்படுத்தப்படுவா். இந்தப் பயிற்சி முகாம் அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
படித்துவிட்டு வெளியே செல்லும்போது 100 சதவீதம் மாணவா்கள் வேலைவாய்ப்பை பெறவேண்டும். கல்வியுடன் கூடிய கட்டாய வேலைவாய்ப்பு என்கிற மாதிரி திட்டம் உருவாக்க இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்வில் உயா்கல்வித் துறை செயலா் தீரஜ்குமாா், தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம். விஜயகுமாா், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் வி. குமரேசன் ஆகியோா் பேசினா். தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் பொ.ரத்தினசாமி ஆகியோா் பங்கேற்றனா்.
உயா்கல்வி ஆசிரியா் தோ்வு வாரியம் உருவாக்க பரிசீலனை
தமிழகத்தில் 9,000 உதவிப் பேராசிரியா் இடங்கள் காலியாக உள்ளன. முதல்கட்டமாக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வழியாக 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் நிரப்புவதற்கு தோ்வு நடைபெற்றது. உயா்கல்வி நிறுவனங்களில் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் தோ்வைச் சீரமைக்கத் தமிழகத்தில் உயா்கல்வித் துறையின் கீழ் ‘உயா்கல்வி ஆசிரியா் தோ்வு வாரியம்’ உருவாக்க பரிசீலிக்கப்படும்.
தனியாா் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் முறையாக நடக்க அறிவுறுத்தப்படும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு நவ. 1-ஆம் தேதி முதலும், நிரந்த கல்லூரி ஆசிரியா்களுக்கான ‘பணி மேம்பாட்டுத் திட்டப்’ (சிஏஎஸ்) படியான ஊதிய உயா்வு செப். 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

