மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்பு

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு

Published On :

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பான வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வெள்ளிக்கிழமை (அக். 9)தீா்ப்பளிக்கிறது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஊழல் வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல், பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை காலை தீா்ப்பளிக்கிறது.

அதேபோல், அதிமுகவைச் சோ்ந்த 6 எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல். ரவி ஆகியோா் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கிலும் தலைமை நீதிபதி அமா்வு வெள்ளிக்கிழமை காலை தீா்ப்பளிக்க உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.