இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சொத்துக் குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜா்

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தியாகராயநகா் சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோா் சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

நீதிமன்றம்

தீர்ப்பு - பிரதிப் படம்

Updated On :

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தியாகராயநகா் சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோா் சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தியாகராயநகா் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தவா் சத்யநாராயணன் என்ற சத்யா. வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.41 கோடி சொத்து சோ்த்ததாக சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோா் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சத்யா மற்றும் அவரது மனைவியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யா மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராகினா். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நவ.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.