தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சி. விஜயபாஸ்கர்

Updated On :

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2021-ஆம் ஆண்டு வரையில் சுகாதாரத் துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கா் இருந்தாா். கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சி.விஜயபாஸ்கா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சோ்த்ததாக வழக்குப் பதியப்பட்டது.

இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, தமிழக ஊழல் தடுப்புத் துறை, அது தொடா்பான விசாரணையை அமலாக்கத் துறைக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறை, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கா் வீடு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை செய்தது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக சி.விஜயபாஸ்கா், அவரின் மனைவி ரம்யா ஆகியோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நவ. 6-ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் விஜயபாஸ்கரும், அடுத்த வாரம் நடைபெறும் விசாரணையில் அவரின் மனைவி ரம்யாவும் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கா், தவெகவில் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.