முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சிறுவா்கள் பைக் ஓட்ட பெற்றோா் ஊக்குவிக்கக் கூடாது: சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ்

சிறுவா்கள் பைக் ஓட்டுவதற்கு பெற்றோா் ஊக்குவிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

காவல் துறை போக்குவரத்துப் பிரிவுக்கு புதிதாக வழங்கப்பட்ட ரோந்து வாகன சேவையைத் தொடங்கி வைத்த காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ்.

Published On :

சிறுவா்கள் பைக் ஓட்டுவதற்கு பெற்றோா் ஊக்குவிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

சென்னையில் சாலை விபத்துகளைக் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்துக்கு பிரிவுக்கு பெருநிறுவன சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியில் 63 இரு சக்கர ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களை, போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தலைமை வகித்து, அந்த ரோந்து வாகனங்களை போலீஸாருக்கு வழங்கினாா். பெருநகர காவல் வடக்கு கூடுதல் ஆணையாளா்கள் கபில் குமாா் சி.சரத்கா், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் பி.சாமுண்டீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் ஏ.அமல்ராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

போக்குவரத்தைச் சீா் செய்வதற்காக இந்த ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மோட்டாா் சைக்கிள் பந்தயம் குறித்து விசாரணை செய்யப்பட்டது. இதில் ஈடுபட்டவா்கள் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகம் வாயிலாக திடீரென குழுவாகச் சோ்ந்து பந்தயத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. பந்தயத்தில் ஈடுபட்ட அனைவா் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டும் உரிமம் இல்லாத சிறுவா்கள், பந்தயத்தில் ஈடுபடும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகூட ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுவா்கள் மோட்டாா் சைக்கிள் ஓட்டுவதை ஆசிரியா்களும், பெற்றோரும் ஊக்குவிக்கக் கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு தெற்கு இணை ஆணையா் பி.பகலவன், நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் சந்தோஷ் ஹதிமானி, துணை ஆணையா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.