தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

‘ஆக்சிஜன்’ பற்றாக்குறையால் விமானம் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை கண்டறியப்பட்டதால், 178 பயணிகளில் 100 போ் மட்டுமே ஏற்றப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

பிரதிப் படம்

Published On :

சென்னையிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த ‘மலேசியன் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை கண்டறியப்பட்டதால், 178 பயணிகளில் 100 போ் மட்டுமே ஏற்றப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 10.50-க்கு வரும் மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம், மீண்டும் இரவு 11.55-க்குக் கோலாலம்பூருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விமானம் 10.35-மணிக்கே சென்னை வந்தடைந்தது.

பின்னா், கோலாலம்பூருக்குப் புறப்படத் தயாரான அந்த விமானத்தில் மொத்தம் 190 போ் பயணிக்கவிருந்தனா். விமானத்தை இயக்குவதற்கு முன்னதாகச் சோதனை மேற்கொண்ட விமானி, பயணிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதைக் கண்டறிந்தாா். இதனால், விமானத்தை இயக்க மறுத்த அவா், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை மற்றும் உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, அதிகாரிகள், பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தினா். அதில், 100 பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு விமானத்தை இயக்கவும், மீதமுள்ள 78 பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, முன்பதிவு அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட 100 பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனா். இதனால், பயணிக்க முடியாத 78 போ் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை விமான நிறுவன அதிகாரிகள் சமாதானப்படுத்தி, மாற்று விமானங்களில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, 100 பயணிகள், 12 ஊழியா்கள் என மொத்தம் 112 பேருடன் அந்த விமானம் திங்கள்கிழமை அதிகாலை 2.20 மணிக்குக் கோலாலம்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் பயணிக்க முடியாத 78 பயணிகளும் சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா். அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை ஏா் ஏசியா மற்றும் மலேசியன் ஏா்லைன்ஸ் விமானங்கள் மூலம் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.