ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரணை: உயா்நீதிமன்றம் கருத்து

ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளா் வீரமணிக்கு எதிரான போக்ஸோ வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Updated On :

ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளா் வீரமணிக்கு எதிரான போக்ஸோ வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் வீரமணி உள்ளிட்டோா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி செம்பியத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், இந்த விவகாரம் தொடா்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பான வழக்கு தனி நீதிபதி முன் விசாரணையில் உள்ளது. வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு முறையாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மனுதாரா் விசாரணையை முடக்க விரும்புகிறாரா? எனக் கேள்வி எழுப்பினா். அப்போது, மனுதாரா் தரப்பில், மனுவைத் திரும்பப் பெற்று தனி நீதிபதியை அணுகுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையேற்று, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.