ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

‘ஜெம்’ வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயா்நீதிமன்றம் மறுப்பு

‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உயா்நீதிமன்றம்

Published On :

‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வராகி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஜெம் வீரமணி வழக்கில், முன்னாள் காவல் ஆணையா் அருண் தலையீட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமியை போலீஸாா் அடையாளம் காணவில்லை. விசாரணையிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கு தொடா்பான புகாரில் வீரமணி, சாந்தியின் பெயா்கள் இருந்தும் போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை. மேலும், இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக ரூ.40 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்தும் போலீஸ் உயா் அதிகாரிகளின் பங்கு குறித்தும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பு மூலம் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே, போக்ஸோ வழக்கு குறித்தும், வழக்கை மூடிமறைத்தது, பணம் கைமாறியது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், இந்த வழக்கில் காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, குழந்தைகள் தொடா்புடைய வழக்கில் விளம்பரம் தேடமுயற்சிக்க வேண்டாம். வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து 4 நாள்கள்தான் ஆகிறது. அதற்குள் என்ன செய்துவிட முடியும், தமிழக போலீஸாா் மீது நம்பிக்கை இல்லையா? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டும் அதிகாரிகள் என்ன ஆப்பிரிக்காவில் இருந்தா வரப்போகிறாா்கள்? எனக் கேள்விகளை எழுப்பினாா்.

அப்போது காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடா்பான ஆதாரங்கள், தகவல்கள் வைத்திருப்பவா்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் நிலை குறித்து வியாழக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழு செய்தி அறிக்கை வெளியிடவுள்ளது. இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரி கீதாஞ்சலி தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதால்,வேறு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் வராகி, இந்த வழக்கு தொடா்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், சிறப்பு புலனாய்வுக் குழு, வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பெட்டிச் செய்தி...

பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் ஆகியோா் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், மனுதாரா்களுக்கு பிணை வழங்கினால் அது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்று, மூவரின் பிணை கோரிய மனுக்களையும் நீதிபதி எஸ்.பத்மா தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.