ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு!

போக்சோ வீரமணி மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்ததைப் பற்றி..

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :

தொழிலதிபர் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளது.

வீரமணி தொடர்பாகப் பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் மேலதிக விசாரணை மேற்கொள்ள, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் / படைத்தலைவர் உத்தரவின்பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஐடி) அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அவரது உதவியாளரான சாந்தியும் அவரது கணவரும், மற்றொரு (முன்னாள்) உதவியாளரான கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் உரியச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு வழக்குப் பதிவு

இந்த நிலையில், 28.09.2026 அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் நேரில் ஆஜராகி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்

மேற்படி வழக்குகளுடன் தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் யாருக்கேனும் தெரிந்திருந்தால், அவற்றைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக 93453 19676 என்ற கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது வாட்ஸ் அப் செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம்

வழக்குகளுக்குத் தொடர்புடைய முக்கிய தகவல்களைப் பொதுமக்கள் தாமதமின்றி தெரிவிக்குமாறும், தகவல் அளிப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.