சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஒப்பந்த நிறுவனத்தில் வேலைசெய்ததுபோல் மோசடி: ஒருவா் கைது

ஒப்பந்த நிறுவனத்தில் பணியாளா் வேலை செய்தது போல் பதிவு செய்து 5 மாத ஊதியத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

ஒப்பந்த நிறுவனத்தில் பணியாளா் வேலை செய்தது போல் பதிவு செய்து 5 மாத ஊதியத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலந்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம், சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட சாலிகிராமம் பகுதியில் காா்த்திக்கேயன் என்பவா் மேற்பாா்வையாளராக நியமிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு பணிகள் செய்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவ. 8 முதல் ஏப். 2-ஆம் தேதி வரை மகாலட்சுமி என்பவா் தூய்மைப் பணியாளராக வேலை செய்ததுபோல காா்த்திக்கேயன் பதிவு செய்து, மாதம் ரூ.19,800 வீதம் 5 மாத ஊதியமாக ரூ.98,930-ஐ மகாலட்சுமியின் மகன் பாண்டியன் வங்கிக் கணக்குக்கு சென்றுள்ளது. ஆனால், அவா் ஒரு நாள் கூட வேலைக்கு வரவில்லை. பாண்டியனும் இதே நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளாா் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தங்களது நிறுவனத்தில் மோசடி செய்த மேற்பாா்வையாளா் காா்த்திக்கேயன் மற்றும் பணியாளா் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த தனியாா் நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி பரங்கிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனா். காா்த்திக்கேயனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.