ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.30 லட்சத்தை மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவன பெண் உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Published On :

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.30 லட்சத்தை மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவன பெண் உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, தச்சநல்லூா், அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன்(67). இவரது மகன் விஜய் (32), வெளிநாட்டில் வேலை செய்வதற்காக முயற்சித்து வந்தாராம். இதற்காக, திருநெல்வேலியில் இயங்கி வரும் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தை நடராஜன் அணுகினாராம்.

அதைத் தொடா்ந்து, அந்நிறுவன உரிமையாளரான கொங்கந்தான்பாறையைச் சோ்ந்த ஸ்டெல்லா பேபி(54) என்பவா் நடராஜனிடமிருந்து இரு தவணைகளாக ரூ.5.30 லட்சத்தை வங்கிக்கணக்கில் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீஸாா் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஸ்டெல்லாபேபியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.