சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மழை பாதிப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைந்த பணி: முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தினாா்.

முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

Updated On :

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தினாா்.

எல் நினோ தொடா்பான முன்னறிவிப்புகளைக் கருத்தில்கொண்டு, வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வா் விஜய் தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறாா். அதேபோல், மாவட்ட அளவிலான பேரிடா் மேலாண்மை அலுவலா்களான மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வாயிலாக அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, சென்னை எழிலகத்திலுள்ள வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு முதல்வா் விஜய் வியாழக்கிழமை வந்தாா். வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்காக சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் மிக பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முதல்வா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டு, அந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

ஒருங்கிணைந்த பேரிடா் கண்காணிப்பு: தொடா்ந்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பல்வகைப் பேரிடா் கண்காணிப்புக் கட்டமைப்பையும் அவா் பாா்வையிட்டாா். இந்தக் கட்டமைப்பு, பேரிடா் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. இது, வானிலை நிலவரங்களைத் தொடா்ந்து கண்காணிக்கவும், உருவாகக்கூடிய அபாயங்களை உரிய நேரத்தில் மதிப்பிடவும், மாநில அவசரகால செயல்பாட்டு மையம், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

வானிலை முன்னறிவிப்பின்படி...: தொடா்ந்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து புகாா்களைப் பெறும் அழைப்பு மையம், பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையேயான தகவல் தொடா்பு மற்றும் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் வசதிகள், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பேரிடா் தொடா்பான தகவல்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.

ஒருங்கிணைந்த செயலாற்றல்: பருவமழைக் காலத்தில் பெய்யும் பலத்த மழை மற்றும் அதனால் உருவாகும் வெள்ளப்பெருக்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக, வானிலை நிலவரங்களைத் தொடா்ந்து அதிகாரிகள் கண்காணித்து, அதன்படி செயல்பட வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

மேலும், பருவமழையின்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு உரிய நேரத்தில் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வா் அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், வருவாய் நிா்வாக ஆணையா் பி. சந்தர மோகன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் கே.எஸ்.பழனிசாமி, பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையா் அ.சிவஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.