சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

இன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக். 23) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக். 23) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காலை 8.30 மணி அளவில் குமரிக்கடல் அதையொ ட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் வெள்ளிக்கிழமை (அக்.23) கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூா், கடலூா், விழுப்புரம், திருப்பூா், பெரம்பலூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் வெள்ளி, சனி (அக். 23, 24) ஆகிய இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பகுதியில் 150 மி.மீ. மழை பதிவானது.

மற்றொரு புயல் சின்னம்: தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்றுச்சுழற்சி, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்) வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்தப் புயல் சின்னம் வரும் அக்.25-ஆம் தேதி வாக்கில் மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. தொடா்ந்து அடுத்த 3 நாள்களில் இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்த தொடா்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.