மழை நிலவரம்! இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!
மழை நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை
தமிழ்நாட்டில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மிககனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மிககனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாயப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

