சென்னைக்கு இன்று முதல் மழை! அடுத்த 2 வாரங்கள் எப்படி இருக்கும்?
வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட மழைப் பொழிவு இன்று தொடங்கவுள்ளது பற்றி...

மழை - பிரதிப் படம்
சென்னையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் எல் - நினோ வல்லுநர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் (அக். 15) தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை தொடங்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 வாரங்கள் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற கணிப்பை பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”அவ்வப்போது திடீர் மழைப்பொழிவு ஏற்படும். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழை பெய்யலாம். சில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யாது. மழைப்பொழிவுக்கு இடையே வெய்யில் அல்லது மேகமூட்டமான சூழல் நிலவும்.
மழையின் நேரம், கால அளவு மற்றும் தீவிரம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடும்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் வெளியே செல்லும்போது குடை அல்லது மழைக்கோட்டை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் சென்னைக்குச் சிறப்பாக அமையவுள்ளது. எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது. நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Rain for Chennai starting today - What will the next two weeks be like?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


