அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

IANS
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக். 14) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இன்று பகல் 1 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி & காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் அக். 15 ஆம் தேதி அளவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary
TN rain update for next 3 hours
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


