துணிகளை உலர வைக்க இன்றே கடைசி நாள்! நாளை முதல் மழை!
தமிழ்நாட்டில் நாளை முதல் மழை தொடங்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்திருப்பது பற்றி...

துணிகளை உலர வைக்க இன்றே கடைசி நாள் - Source: Unsplash
தமிழ்நாட்டில் நாளைமுதல் மழை தொடங்கவுள்ளதாக மாநில அரசின் எல் - நினோ வல்லுநர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக செய்து வருகின்றன.
இந்த நிலையில், நாளைமுதல் மழை தொடங்கவுள்ளதாக பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:
”வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, வெயிலில் துணிகளை உலர்த்துவதற்கு இன்றைய நாளே மிகச் சிறந்த கடைசி நாளாகும்.
நாளை முதல் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அக்டோபர் 15-ஆம் தேதியன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
எனவே, சென்னை மற்றும் தமிழக மக்களே, இன்றைய வெயிலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வானம் மேகமூட்டமாகி மழை பெய்யத் தொடங்கும் முன்பே உங்கள் துணிகளை உலர்த்திவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Today is the last proper day to dry your clothes in the sunshine before the Northeast Monsoon kicks in
— Tamil Nadu Weatherman (@praddy06) October 13, 2026
Rains are expected to start from tomorrow, and the monsoon onset is likely to be declared on October 15.
So, Chennai and Tamil Nadu, make the most of today's sunshine! Getâ¦
Summary
Today is the last day to dry clothes! Rain starts tomorrow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

