திமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

திமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜி

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35-க்கு கொள்முதல் செய்யப்படுவது குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்...

senthil balaji

செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

Published On :

திமுக ஆட்சியில் அதிகபட்சமாக ரூ. 20-க்கு கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம், தற்போது ரூ. 35-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை சரிசெய்ய தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவதற்கான டெண்டரை மின் வாரியம் இறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி பேசியதாவது:

”தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்பாக பேசாத நாள்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் மின்வெட்டு நடக்கிறது. உச்சபட்மாக தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ரீல்ஸ் ஆட்சி மிக மோசமான நிலையில் இருக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது தவெக அரசு. அனைத்து துறை சார்ந்த பிரச்னைகளுக்கு பதிலளிக்கும் மின்துறை அமைச்சர், அவர் துறை பிரச்னைகள் பற்றி கேட்டால் பதிலளிப்பதில்லை. ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின்வெட்டு தொடர்பாக எந்த தீர்வும் காணவில்லை.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்தது. ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதல் மின்தேவை அதிகரித்தது. ஆனால், எந்த தடையும் இல்லாமல் சீராக ஆட்சி நடத்தினோம்.

திமுக ஆட்சியில் இருக்கும்போது தற்போதைய மின்துறை அமைச்சர் ஒரு பதிவிட்டிருந்தார். ரூ. 20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் திமுக அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இன்று ரூ. 35-க்கும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

எங்கள் ஆட்சியில் அதிகபட்சமாக ரூ. 20-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஏனெனில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக தேவை ஏற்பட்டது. இதற்காக டிசம்பர் மாதத்திலேயே டெண்டர் இறுதி செய்யப்படும். அரசு மின் உற்பத்தி நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே வெளிசந்தையில் கொள்முதல் செய்வோம்.

இன்றைய அரசு முழுக்க முழுக்க வெளிச் சந்தையில் கொள்முதல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் 35 சதவிகிதம்தான் உற்பத்தி செய்கிறது. சொந்த உற்பத்தியை குறைத்து, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறார்கள்.

வேறு மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக தொகைக்கு மின்சாரத்தை விற்பதால், அந்தந்த மாநில அரசுகளே வாங்காத நிலையில், தமிழ்நாடு அரசு வாங்குகிறது.

திமுக ஆட்சியில் உபரியாக இருந்த 8,600 மி. யூனிட் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தளவுக்கு மின்சார வாரியத்தின் நிலை உயர்ந்திருந்தது” எனத் தெரிவித்தார்.

Summary

Electricity procured at Rs. 20 during the DMK regime, but now tvk govt finalised tender at Rs. 35 per unit —Senthil Balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER