கள்ளக்குறிச்சி விவகாரம்: பதிலளிக்க மறுத்த அமைச்சர் விஜய் பாலாஜி!
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பதில் அளிக்க மறுத்துவிட்டதைப் பற்றி...

ஈரோடு சோலார் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி சந்தை கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜய் பாலாஜி.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு கைத்தறித் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி பதில் அளிக்க மறுத்து விட்டார்.
ஈரோடு சோலார் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி சந்தை கட்டடத்தை கைத்தறித் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி மற்றும் அதிகாரிகளுடன் இன்று (நவ. 27) காலை ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஈரோடு- கரூர் சாலையில் சோலாரில் கடந்த ஆட்சியில் ஆட்சியர், ஆணையர் ஆகியோர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியே காய்கறி சந்தை கட்டப்பட்டது.
தற்போது தொலைதூரம் என கூறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். விரைவில் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு டெண்டர் விடப்பட்டு சந்தை கட்டடம் திறக்கப்படும்.
கடந்த வாரம் ஆட்சியர் அலுவலகத்தில் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கு கால அவகாசம் கேட்டு நெசவாளர்கள் மனு அளித்தனர். வேறு அரசு பணி இருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள் வாடகை குறைக்க அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விலையில்லா வேஷ்டி, சேலை 50 விழுக்காடு உற்பத்தி பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. வருகிற டிச. 15 ஆம் தேதிக்குள் 80 சதவிகித பணிகள் நிறைவு பெறும். பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை உடுத்தக்கூடிய வகையில் வழங்க வேண்டும் என்பது அரசின் நோக்கம்.
மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கு டிச. 15 முதல் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதைத்தொடர்ந்து இடைத்தேர்தல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளிக்கவில்லை.
Summary
Minister for Handlooms M. Vijay Balaji refused to respond to questions from reporters regarding the Kallakurichi issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

