கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்! உதயநிதி பேட்டியை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக உதயநிதி பேட்டியை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

சென்னை உயர்நீதிமன்றம்
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகை, ஊடகங்களுக்கு தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வருவதாக புகார் தெரிவித்து முறையிட்டார்.
இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Summary
Kallakurichi MLA issue! High Court orders removal of Udhayanidhi's interview!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


