வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

நவ. 23-ல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கடலூர், தஞ்சாவூர் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

rain

நவ. 23-ல் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - கோப்புப்படம்

Updated On :

கடலூர், தஞ்சாவூர் உள்பட 13 மாவட்டங்களில் நவ. 23 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அக்வான்" (Akvan) தீவிர புயல் (Severe Cyclonic Storm) வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை (நவ. 19) 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20 ஆம் தேதி நண்பகல் நர்சப்பூர் மற்றும் புரிக்கு இடையே கோபால்பூருக்கு அருகே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, நவ. 19-ல் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ. 20: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ. 21: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ. 22: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ. 23: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நவ. 24: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Centre has stated that there is a possibility of heavy rain in 13 districts, including Cuddalore and Thanjavur, on November 23.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.