வானிலை: இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரையிலான வானிலை முன்னறிவிப்பு பற்றி.....

மழை
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயல் உருவாகிறது. இது, அடுத்த 2 நாள்களில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நவ.17, 18, 19-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நாள்களில் வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.16) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 16) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
It has been reported that rain is likely to occur until 10:00 AM today in 20 districts, including Chennai, Kancheepuram, and Tiruvallur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


