டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்வி

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால் எப்படி செல்வது என்றே தெரியாது, ஏன் இந்த நிலை என மக்கள் கேள்வி

உட்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மெட்ரோ ரயில் சேவை துவக்கம் - கோப்புப்படம்

Updated On :

வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திறக்க அனுமதி பெற்று கிட்டத்தட்ட பத்து மாதங்கள் வரை காத்திருந்த பிறகுதானே திறக்கப்பட்டுள்ளது. பிறகு, ஏன் சில அடிப்படை வசதிகளைக்கூட சரிவர செய்யப்படவில்லை என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி - முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்து, ரயிலில் பூந்தமல்லி சென்றனர். பின்னர், பிரதமரும் முதல்வரும் மீண்டும் அதே ரயிலில் போரூா் புறவழிச்சாலை நிலையத்துக்கு வந்தனர். குறைபாடுகளால்தான் வடபழனியில் இறங்கவில்லையா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

சென்னையில் 2-ஆம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி ரயில் நிலையம் வரையிலான திட்டம் முக்கியமானது. அந்த வழித்தடத்தில் உலக, ஆசிய அளவில் இல்லாத வகையில் ஈரடுக்கு மேம்பாலங்கள், மயிலாப்பூரில் நான்கடுக்கு வழித்தடங்கள் தற்போதுதான் அமைக்கப்பட்டுள்ளன.

வடபழனி முதல் பூந்தமல்லி புறநகா் சாலை வரை உயா்நிலை பால மெட்ரோ ரயில் பாதையில் 14 நிலையங்களில் தற்போது 11 நிலையங்களில் மட்டுமே ரயில் நின்று செல்கிறது. பூந்தமல்லி - வடபழனி இடையே தற்போது 10 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வடபழனி ரயில் நிலையத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவிலல்லை. இதனால், புதிய வடபழனி ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்று அடுத்த முதல்கட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை அடையும் நிலை உள்ளது. பெரிய பெரிய சூட்கேஸ் போன்ற உடைமைகளுடன் ஸ்கைவாக் மேம்பாலம் வழியாக செல்வது பெரும் சிரமத்தை கொடுபப்தாகவும் கூறுகிறார்கள்.

ரயில்கள் எவ்வளவு நேரத்தில் வரும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை சரியாக செயல்படவில்லை. இதனால் அடுத்த ரயில் எப்போது வரும் என்பதே தெரியாமல் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

சிலர், நடைமேடையின் விளிம்பில் நிற்கிறார்கள். அவர்களை ஊழியர்கள்தான் எச்சரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், கலையில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது இது அபாயத்தை ஏற்படுத்தலாம்.

மேலும், ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் விபத்து தடுப்பு கண்ணாடித் தடுப்புகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ரயில் வந்ததும்தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், வடபழனி ரயில் நிலையத்தில் எப்போதும் திறந்தேயிருக்கிறது. இது பயணிகளுக்கு அபாயத்தை அளிக்கலாம் என்றும் மக்கள் புகார் கூறுகிறார்கள்.

வழிகாட்டும் பலகைகளை வைப்பதில் என்னதான் பெரிய பிரச்னை இருந்துவிடப்போகிறது. எங்கே போக வேண்டும், எப்படி போக வேண்டும், படிகட்டு எங்கே, என எதற்கும் வழிகாட்டும் பலகைகள் இல்லை. முதல்முறையாக வருவோரின் நிலை திண்டாட்டம்தான் என்கிறார்கள் பல முறை பலவற்றையும் தேடித் தேடிக் கண்டடைந்த பயணிகள்.

வடபழனி ரயில்நிலையத்தின் நுழைவு வாயில் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையுமாம். அதன்பிறகே, வழிகாட்டும் பலகைகள் அமைக்கப்படலாம் என்று பயணிகளே மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER