ராயபுரம் பகுதியில் பைக் பந்தயம்: 5 போ் கைது
ராயபுரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சித்திரிப்பு
ராயபுரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ராயபுரம், கல்மண்டபம் சிக்னல் எதிரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலா் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
இதில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது வட சென்னை பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் (18), சஞ்சய்குமாா் (23), சந்தோஷ்குமாா் (18), ராஜேஷ் (20), கேசவன் (23) என்பது தெரிய வந்தது. இவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து விலை உயா்ந்த 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

