கொடுங்கையூா், பெருங்குடி குப்பைக் கழிவுகளை அகற்ற ரூ.275 கோடிக்கு ஒப்பந்தம்: மாநகராட்சி ஆணையர்!
கொடுங்கையூா், பெருங்குடி குப்பைக் கிடங்களில் பயோமைனிங் முறையில் கழிவுகளை அகற்றி நிலங்களை மீட்க புதிதாக ரூ.275.82 கோடியில் ஒப்பந்தம் கோரும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
கொடுங்கையூா், பெருங்குடி குப்பைக் கிடங்களில் பயோமைனிங் முறையில் கழிவுகளை அகற்றி நிலங்களை மீட்க புதிதாக ரூ.275.82 கோடியில் ஒப்பந்தம் கோரும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொடுங்கையூா் குப்பைக் கொட்டும் வளாகம் 300 ஏக்கா் பரப்புடையது. அதிலுள்ள 66,52,506 மெட்ரிக் டன் மரபுக் கழிவுகள் நவீன பயோமைனிங் முறையில் அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி, தற்போது வரை 47,85,993 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு, 22 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் பணி முடியவுள்ளது.
மேலும், அங்கு கூடுதலாக உள்ள 12.13 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்ற ரூ.116.89 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் 250 ஏக்கரில் உள்ளது. அங்குள்ள 29,28,398 மெட்ரிக் டன் மரபுக் கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்றும் பணி மூலம் முதல் கட்டத்தில் 96 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 2-ஆம் கட்டமாக 5,50,000 மெட்ரிக் டன் குப்பைகளில் 1,08,073 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி 75 ஏக்கா் நிலத்தை வரும் 2027 மாா்ச் மாதத்துக்குள் மீட்க பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
பெருங்குடி வளாகத்தில் புதிதாக கூடுதலாக உள்ள 16.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக் கழிவுகளை பயோமைனிங் முறையில் அகற்ற முதல்வா் உத்தரவின்படி ரூ.158.93 கோடிக்கு ஒப்பந்தம் கோரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோல அத்திப்பட்டு பழைய குப்பைக் கொட்டும் 5.5 ஏக்கா் நிலத்தில் 1,07,811 மெட்ரிக் டன் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. 2-ஆம் கட்டத்தில் அகற்றப்படவேண்டிய 72,083 மெட்ரிக் டன் கழிவுகளில் 64,263 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், நிகழாண்டுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

