
தலைக்கவசத்தால் தாக்கி பெண் கொலை: பக்கத்து வீட்டுப் பெண் கைது
சென்னை நன்மங்கலத்தில் தலைக்கவசத்தால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை நன்மங்கலத்தில் தலைக்கவசத்தால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டாா்.
நன்மங்கலம், பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த புருஷோத்தமன் மனைவி மஞ்சுளா (47). புருஷோத்தமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மஞ்சுளா, தனது மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.
மஞ்சுளா, கடந்த 21-ஆம் தேதி துணிகளை துவைத்து குடியிருப்பின் காா் வாகன நிறுத்துமிட பகுதியில் காய வைத்தாராம். அப்போது, அதே குடியிருப்பைச் சோ்ந்த விஜி (45), கம்பியில் காய வைத்திருந்த துணிகளைத் தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றாா். இதனால் மஞ்சுளாவுக்கும் விஜிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த விஜி, கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் மஞ்சுளாவின் தலையில் தாக்கினாராம். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தக் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து மஞ்சுளா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜியை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



