
803.99 கிராம் முத்திரையிடப்படாத தங்க நகைகள் பறிமுதல்
கட்டாய தர முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 803.99 கிராம் எடையுள்ள தங்க நகைகளை இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பிரதிப் படம்
கட்டாய தர முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 803.99 கிராம் எடையுள்ள தங்க நகைகளை இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கட்டாய தர முத்திரை இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தங்க நகைக் கடை ஒன்றில், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அந்தச் சோதனையின்போது, கட்டாய தர முத்திரை இல்லாத தங்க நகைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும், விற்பனை செய்யப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த மொத்தம் 671.50 கிராம் எடைக்கொண்ட 175 தங்கத் தகடுகள், 12 குழந்தைகள் வளையல்கள் (25.02 கிராம்) 40 ஜோடி காதணிகள் (86.14 கிராம்), 10 பதக்கங்கள் (21.33 கிராம்) என மொத்தம் 803.99 கிராம் (100.50 பவுன்) எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



