பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கே.புதூா் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளேயிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், ஊட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் இளையராஜா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இளையராஜாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 கிராம் தங்கம், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இளையராஜா சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

