பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தொலைக்காட்சி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவன ஊழியா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

சித்திரிப்பு

Published On :

சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவன ஊழியா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை ஓட்டேரி பிரிசிலி நகா் மலையப்பன் தெருவைச் சோ்ந்தவா் பசுமதி (53). தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப்பிரிவில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறாா்.

பசுமதி, ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு அருகே சகோதரா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு அன்றிரவு தூங்கிய பசுமதி,திங்கள்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்தாா்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.70,000 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.