செங்கல்பட்டு, மே 14: பிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆலிப் லினார்ட் ஜோசப் 1171 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தாரிணி, காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளி மாணவன் நிரஞ்சன் ஆகியோர் 1162 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பெற்றுள்ளனர். செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.சரவணன் 1159 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தை பெற்றுள்ளனர். செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆலிப் லினார்ட் ஜோசப் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 191, ஆங்கிலம் 187, இயற்பியல் 195, வேதியியல் 200, உயிரியியல் 200, கணிதவியல் 198, மொத்த மதிப்பெண் 1171. புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தாரிணி பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 187, ஆங்கிலம் 186, இயற்பியல் 196, வேதியியல் 196, உயிரியல் 200, கணிதவியல் 197, மொத்த மதிப்பெண் 1162. காஞசிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிரஞ்சன் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 189, ஆங்கிலம் 189, இயற்பியல் 197, வேதியியல் 195, உயிரியியல் 193, கணிதவியல் 199, மொத்தமதிப்பெண்கள் 1162. செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.சரவணன் பெற்ற மதிப்பெண்கள் விவரம்; தமிழ் 185, ஆங்கிலம் 186, இயற்பியல் 197, வேதியியல் 199, உயிரியல் 194, கணிதவியல் 200, மொத்த மதிப்பெண் 1159.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.