மின்சாரம்: அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மழைக்கால முன்னேற்பாடு நடவடிக்கையாக செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில், அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

மழைக்கால முன்னேற்பாடு நடவடிக்கையாக செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில், அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில் அடங்கிய செங்கல்பட்டு, மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் கோட்டங்களுக்கு முன்னேற்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அவசரகால உதவிக்கு அந்தந்த கோட்டங்களில் உள்ள குழுக்களை தொடர்புகொண்டு, மின் கட்டமைப்புகளில் ஏற்படும் பழுதுகள், மின்தடை குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
கோட்ட வாரியாக தொலைபேசி எண்களின் விவரம்:
செங்கல்பட்டு கோட்டம்: செங்கல்பட்டு நகரம், திருக்கழுகுன்றம், புக்கத்துரை, சாலவாக்கம், ஆத்தூர், சிங்கபெருமாள் கோவில், அதனைச் சுற்றியுள்ள பகுதியினர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9445850070, 9445850003,9445850009, 044-27448227, 9445850015,9445850019, 9445850026.
மறைமலைநகர் கோட்டம்: மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், மாம்பாக்கம், கேளம்பாக்கம்,கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், அதனைச் சுற்றியுள்ள பகுதி: 9445850120, 9445850098, 9445850104,044-27479244, 9445850121, 9445850115, 9445850113.
ஸ்ரீபெரும்புதூர் கோட்டம்: ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மண்ணூர், சுங்குவார்சத்திரம், திருவாலங்காடு, கடம்பத்தூர், கீழானூர், திருநின்றவூர், பேரம்பாக்கம், திருமழிசை, அதனைச் சுற்றியுள்ள பகுதி: 9445850110,9445850064, 9445850075, 044-27107660, 9445850081,9445850089, 9445850067.
மதுராந்தகம் கோட்டம்: மதுராந்தகம், செய்யூர், கருங்குழி, பூதூர், கூவத்தூர், கடுகுப்பட்டு, எண்டத்தூர், அதனைச் சுற்றியுள்ள பகுதி: 9445850080, 9445850045, 9445850051, 044-27531588, 9445850056.
அச்சிறுபாக்கம் கோட்டம்: அச்சிறுபாக்கம், தொழுப்பேடு, சூணாம்பேடு, எலப்பாக்கம், ஒரத்தி, மேல்மருவத்தூர், அதனைச் சுற்றியுள்ள பகுதி: 9445850080, 9445850027, 9445850032, 044-27522377, 9445850037, 9445850029.
இதுதவிர, அந்தந்தப் பகுதி மின்சார வாரிய அலுவலகங்களையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட அவசரகால குழுக்களை ஒருங்கிணைக்க மேற்பார்வை பொறியாளர் (9443343293), செயற்பொறியாளர் (9445850200) தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com