பள்ளி மாணவர்களைப் போராட்டத்துக்கு ஊக்குவிப்போர் மீது கடும் நடவடிக்கை

பள்ளி மாணவர்களைப் போராட்டத்துக்கு ஊக்குவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரித்துள்ளார்.
Updated on
1 min read

பள்ளி மாணவர்களைப் போராட்டத்துக்கு ஊக்குவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
அப்போது, கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை சிலர்  ஆட்சியர் அலுவலகத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அதோடு, போராட்டத்தில் ஈடுபட செய்துள்ளார்கள்.
 இந்நிலையில், சம்பந்தப்பட்ட கோவிந்தவாடி பள்ளியின் கூடுதல் கட்டடத்துக்கு மாற்று இடம் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இதுபோன்ற செயல் கண்டித்தக்கது என மாணவர்களை அழைத்து வந்தவர்களை ஆட்சியர் பொன்னையா நேரில் கடுமையாக எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு: 
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல், தடுத்து, கல்வி கற்பதற்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட வலுக்கட்டாயமாக அழைத்து வரும் நபர்கள் மீது இனிவரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com