மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்கில் சென்றவர் வாகனம் மோதி சாவு

மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.

Updated On :9 ஜூலை 2018, 10:38 pm

மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரம். அவரது மகன் முருகேசன் (52) அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மதுராந்தகம் வழியாக கூடலூருக்கு சென்று கொண்டிருந்தார். மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோயில் அருகே பைக்கில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் பலத்த காயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், முருகேசனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முருகேசன் திங்கள்கிழமை இறந்தார். இவ்விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.