திறன் விழிப்புணர்வு வார விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை பரிசுகளை வழங்கினார்.
உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி (ஜூலை 15) வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் கடந்த 9 முதல் 15ஆம் தேதி வரை விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கடந்த ஒரு வார காலமாக திறன் விழிப்புணர்வுப் பேரணி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்குகள், சிறப்புப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாமில் திறன் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதில், திறன் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.நூர்முகமது, வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி, உதவி ஆணையர் (கலால்) அமீதுல்லா, தனித் துணை ஆட்சியர் சக்திவேல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வி.மாலதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








