விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அரிமா சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மாமல்லபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. 

News image

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோர்.

Updated On :24 ஜூலை 2018, 4:48 am IST

மாமல்லபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. 
அரிமா சங்கம், ஆண்டாளம்மாள் ஊரக சுகாதார மருத்துவ மையம், கீரப்பாக்கம் ஆசான் மெமோரியல் பல் மருத்துவமனை மற்றும் ராஜன் கண் மருத்துவமனை இணைந்து மாமல்லபுரம் கே.கே.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. லயன்ஸ் சங்கத் தலைவர் பி.ஓம்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு செயலாளர் டி.புனிதவேல், பொருளாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் கே.ஏகாம்பரம், வட்டாரத் தலைவர் மேரி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினர். ஆண்டாளம்மாள் ஊரக சுகாதார மருந்துவ மைய மருத்துவர்கள், ஆசான் மெமோரியல் பல் மருத்துவமனை மருத்துவர்கள், ராஜன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், உடல் பருமன், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை நோய், விழித்திரை பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. 
பல் சொத்தை நீக்குதல், வேர் சிகிச்சை, பல் ஈரல் வீக்கம், பல் வலி உள்ளிட்டவற்றுக்கான சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும், பற்களில் ஏற்படும் உபாதைகள் தொடர்பாக பல் மருத்துவரிடம் உடனுக்குடன் காட்டி சிகிச்சை மேற்கொள்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. 
மாமல்லபுரம், தேவனேரி, கொக்கிலமேடு, பூஞ்சேரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாமல்லபுரம் நகர அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.