மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை: 3 பேர் கைது
By DIN | Published On : 01st April 2019 09:00 AM | Last Updated : 01st April 2019 09:00 AM | அ+அ அ- |

கீவளூர் பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்த 3 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்வதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸார் கீவளூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். அப்போது, கீவளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38), சீனிவாசன்(40), மண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (44) ஆகியோர் ஒரு வீட்டில் மது பாட்டில்களைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த மூவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீஸார், அவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.