அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 11th April 2019 04:29 AM | Last Updated : 11th April 2019 04:29 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் பேரவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திருப்போரூரில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் நாவலூர் முத்து, மாவட்டத் துணைச் செயலர் யஷ்வந்த் ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல், செங்கல்பட்டு சின்னநத்தம், பெரியநத்தம் பகுதிகளில் அதிமுக நகரச் செயலர் செந்தில்குமார் தலைமையில், பாமக , தேமுதிக , பாஜக, புரட்சி பாரதம், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
அமமுக வேட்பாளர்...
அமமுக வேட்பாளர் ஏ.முனுசாமி செங்கல்பட்டு சார்-ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது, நகரச் செயலர் செந்தில்குமார், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலர் கஜா , மாணவரணி மாவட்டச் செயலர் பாபு (எ) சீனிவாசன், மாவட்டப் பாசறைச் செயலர் எஸ். ஏ.சுபாஷ் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.