தேர்தல் பிரசாரம்...திமுக வேட்பாளர்...
By DIN | Published On : 12th April 2019 04:22 AM | Last Updated : 12th April 2019 04:22 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் சித்தாமூர் ஒன்றியத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
சித்தாமூர் ஒன்றியத்தைச் சேர்ந்த விளாங்காடு, முட்டுக்காடு, அமைந்தகரணை, ஆற்காடு, வெடால், வில்லிவாக்கம், கடுக்கலூர், பாளையூர், செய்யூர் எல்லையம்மன் கோயில், தேன்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உள்பட்ட வார்டுகளிலும் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது, திமுக மாவட்டச் செயலரும், உத்தரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர், செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மாவட்டப் பொறியாளர் அணிச் செயலர் ரவீந்திரநாத், சித்தாமூர் ஒன்றிய முன்னாள் செயலர் அ.விஜயன், விளாங்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அ.நடராஜன், ஒன்றியச் செயலர் ஏழுமலை, நிர்வாகிகள் வேல்முருகன், கார்த்திகேயன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ஆதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
படாளம் கூட்டுச் சாலையில்...
காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் படாளம் கூட்டுச் சாலையில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ், மதுராந்தகம் வட்டச் செயலர் கே.வாசுதேவன், திமுக ஒன்றியச் செயலர் எச்.சத்யசாயி, நிர்வாகிகள் சி.எழுமலை, எம்.எஸ்.தேவராஜ்,
க.முகிலன், எம்.இந்திரா, சசிகுமார், எஸ்.மாசிலாமணி உள்ளிட்டோர் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினர். இதில், திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.