அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 17th April 2019 12:52 AM | Last Updated : 17th April 2019 12:52 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமியை ஆதரித்து செங்கல்பட்டில் அக்கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் மேலமையூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சீனிவாசன் என்ற பாபு தலைமையிலும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் கஜா தலைமையிலும் அக்கட்சியினர் பேரணியாகச் சென்று அமமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.
திமுகவுக்கு ஆதரவாக...: செங்கல்பட்டு நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் நரேந்திரன், அன்புச்செல்வன், சந்தோஷ், ஏழுமலை, சந்தியா, காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ஜே.பாஸ்கர், நிர்வாகிகள் ஜெயராமன், ரியாஸ் பாய், முருகன், ஆர்.குமரவேல், அதிரசம் ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.தமிழரசன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம் பேரூராட்சி செயலாளர் எம்.கே.தண்டபாணி, சந்தானம், சண்முகம் உள்ளிட்டோர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் மறைமலைநகர் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...